மேல், சபரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடமத்திய, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘அம்பர்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (12) காலை 11.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (13) அதிகாலை 1.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்போது கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
எனவே, மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குப் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

