மேஷம்: இன்று உத்தியோகத்தில் கடின உழைப்பு தேவைப்படும். பதவி உயர்வு மற்றும் நிலுவைத் தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
ரிஷபம்: வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். உங்கள் செயல்திறனால் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படலாம். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.
மிதுனம்: பணப்பற்றாக்குறை ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெற முயற்சி செய்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் கவனமாக நடந்துகொள்வது நல்லது. புதிய வேலை தேடுபவர்கள் அலைச்சலைச் சந்திக்க நேரிடலாம்.
கடகம்: குடும்பத்தில் கூடுதல் செலவுகள் ஏற்படலாம். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளில் அலைச்சல் ஏற்படலாம்.
சிம்மம்: காரியங்களில் தடைகளும் தாமதங்களும் ஏற்படலாம். மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பொருட்களைப் பாதுகாப்பதில் கவனம் தேவை. உடல்நலத்திலும் அக்கறை காட்டுங்கள்.
கன்னி: தொழில், வியாபாரத்தில் லாபம் குறைய வாய்ப்புள்ளது. திட்டமிட்டுச் செயல்படுவது நன்மை தரும். பணிச்சுமை அதிகரிக்கலாம். உத்தியோகத்தில் கவனத்துடன் செயல்படுவது அவசியம்.
துலாம்: குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் பின்னர் சீராகும். குழந்தைகள் தொடர்பான கவலைகள் அதிகரிக்கலாம். சிக்கலான விடயங்களில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.
விருச்சிகம்: பேச்சாற்றலால் காரியங்களைச் சாதிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். பணிச்சுமையும் குறையலாம்.
தனுசு: புத்திசாலித்தனமான பேச்சால் காரியங்களைச் சாதிப்பீர்கள். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம்.
மகரம்: தொழில் தொடர்பான விடயங்களில் சாதுரியமாகச் செயல்படுவீர்கள். பிறருடைய செயல்களுக்குப் பொறுப்பேற்பதைத் தவிர்ப்பது நல்லது. பணிச்சுமை குறைய வாய்ப்புள்ளது.
கும்பம்: தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். புதிய வாய்ப்புகள் உருவாகும். நிலுவைத் தொகை கிடைப்பதுடன் வேலை தேடுபவர்களுக்கும் சாதகமான பலன்கள் ஏற்படலாம்.
மீனம்: குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையிலான மனவருத்தங்கள் குறையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைப்பதுடன் எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கலாம்.

