ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மறுபரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு!

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் மறுபரிசீலனைப் பெறுபேறுகளைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை (17) பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகியவற்றிற்குச் சென்று, தமது பரீட்சைச் சுட்டெண்ணை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பெறுபேறுகள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு, பாடசாலைப் பரீட்சைகள் அமைப்பாக்கம் மற்றும் பெறுபேறுகள் கிளையின் 011 278 4208, 011 278 4537 அல்லது 011 278 5922 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *