ஒக்டோபர் மாத முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு!

அக்டோபர் மாதத்துக்குரிய முதியோர் கொடுப்பனவுகள் இன்று (29) முதல் பயனாளிகளின் அஸ்வசும’ வங்கி கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளன.

இதன்படி, அஸ்வசும நலன்புரி திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதுக்கும் மேற்பட்ட 616,362 முதியோர்களுக்காக 3,081,810,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 70 வயதுக்கும் மேற்பட்ட 79,520 முதியோர்களுக்காக 397,600,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இரண்டு கட்டங்களின் கீழ் 695,882 முதியோர் பயனாளிகளுக்காக அக்டோபர் மாதத்தில் செலுத்தப்பட வேண்டிய மொத்தத் தொகை 3,479,410,000 ரூபாவாகும்.

உரிய பயனாளிகள் இன்று (29) முதல் தமது அஸ்வசும வங்கிக் கணக்குகள் ஊடாக இந்த முதியோர் கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *