மட்டக்களப்பு பிரதேசம் ஒன்றில் 16 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அந்த பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய கிருஷ்ணபிள்ளை உதயராசா அல்லது உதயன் 21 வருட கடூழிய சிறை தண்டனையும் 20 ஆயிரம் அபராதமும் செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று வெள்ளிக்கிழமை (30) தீர்ப்பளித்தார்.
குறித்த பிரதேசம் ஒன்றில் கடந்த 2019 ஆகஸ்ட் 23 ம்திகதி சட்டரீதியான பாதுகாப்பில் இருந்த சிறுமியை கவர்ந்து கொண்டு சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் பொலிசார் கைது செய்து நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்கு பின்னர் 2023ம் ஆண்டு மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்தது.
இந்த நிலையில் வழக்கு தொடுநர் சார்பில்; அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் ரி..தர்சிகா ஆகியோர் ஆஜராகி வாதாடி வந்த நிலையில் குறித்த நபர் குற்றவாளியாக கடந்த 23ம் திகதி வெள்ளிக்கிழமை நீதிமன்றில் இனங்காணப்பட்டு தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த நபரின் முதலாவது குற்றமான சட்டரீதியான பாதுகாப்பில் இருந்த சிறுமியை கவர்ந்து கொண்டு சென்ற தண்டனைச்சட்டக் கோவை 354 கீழ் ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமாக செலுத்துமாறும்.
மூன்றாவது குற்றச்சாட்டான சிறுமி மீதான பாலியல் வல்லுறவுக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

