மேய்ச்சல் தரைப் போராட்டம்: த.தே.ம.மு. தேசிய அமைப்பாளருக்கு பயங்கரவாத தடுப்புப் பிரிவு அழைப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு (ரிஜடி) காரியாலயத்துக்கு எதிர்வரும் 4ம் திகதி விசாரணைக்கு வருமாறு மட்டக்களப்பில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற ரிஜடி யினர் அழைப்பாணையை நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) கையளித்துள்ளதாக கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்புக்கு எதிராக கால்நடை பண்ணையாளர்களுடன் இணைந்து த.சுரேஸ் தொடர்ந்து அறவெளி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் நாளை திங்கட்கிழமை (2) மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்னாள் மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரையில் அத்துமீறிய விவசாயிகள் மற்றும் கால் நடைகள் சுட்டுக் கொல்லப்படுவது மற்றும் நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துமாறு கோரி மாபெரும் ஆர்ப்பாட்ட போராட்டம் இடம்பெறவுள்ளது

இந்த போராட்டத்தை மலினப்படுத்தி குழப்புவதற்காக அரசாங்கம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மூலம் இவ்வாறான செயல்பாட்டை செய்து அடிபணியவைக்கும் செயற்பாடாகவே இந்த ரிஜடி யின் விசாரணை என்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கருதுகின்றேன்.

எது எவ்வாறு இருந்தாலும் எந்த அச்சுறுத்தல்களுக்கும் நாங்கள் அடிபணிய போவதில்லை அறவெளி போராட்டம் ஊடாக அபகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் பூர்வீக நிலமான மேய்ச்சல் தரை மீட்பதற்கு தொடர்ந்து குரல் கொடுத்து போராடுவோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *