கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணி!

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கான முன்னேற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று (01.11.2026) சிரமதானப் பணி இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இடம்பெற்ற இப்பணியில், பணிக்குழுவினர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, மாவீரர் துயிலுமில்லத்தின் சுற்றுப்புறங்களைத் தூய்மைப்படுத்தி, நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

பலரும் ஒன்றிணைந்து இந்தப் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *