ஈரானுடனான பதற்றங்களுக்கு மத்தியில் இஸ்ரேலிய இராணுவம் தேடல் மற்றும் மீட்புப் பயிற்சிகளை அறிவித்துள்ளது.
இராணுவத்தின் தேடல் மற்றும் மீட்புப் படைப்பிரிவு, இந்த வாரம் முழுவதும் நாடு முழுவதும் பயிற்சிகளை மேற்கொள்ளும் என்று இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த ஒத்திகைகளின் ஒரு பகுதியாக, படைகள் மற்றும் இராணுவ வாகனங்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்றும், ஆனால் “பாதுகாப்புச் சம்பவங்கள் குறித்த எந்த அச்சமும் தேவையில்லை” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானிய இராணுவப் பேச்சாளர் சனிக்கிழமையன்று எச்சரிக்கை விடுக்கையில், “அமெரிக்க ஜனாதிபதி, சியோனிஸ்டுகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் பேராசையின் தூண்டுதலால் இப்பகுதியில் மீண்டும் ஒரு ஆபத்தான செயலில் ஈடுபட்டால், போரின் தீப்பிழம்புகள் சந்தேகத்திற்கு இடமின்றி இன்னும் பரந்த நிலப்பரப்பிற்குப் பரவும்” என்று தெரிவித்தார்.

