தனியார் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பல பகுதிகளில் வழங்கப்பட்டு வரும் நிலையில் இன்று(17) கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் தனியார் கல்வி நிலையம் ஒன்றின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கப்பட்டது.

2006 ஆம் ஆண்டில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்போடு, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என சிங்களப்பேரினவாதம் முன்னெடுத்த திட்டமிட்ட இன அழிப்பு 2009 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் மே மாதம் 18 ஆம் திகதியன்று 1,50,000 மக்களின் படுகொலையோடு நிறைவடைந்தது.

இந்த இன அழிப்புப் போரை சர்வதேச சமூகம் கைகட்டி, வாய்மூடி மெளனமாய் வேடிக்கை பார்த்த அந்த மே 18 ஆம் நாளை ஆண்டுதோறும் உலகம் முழுதும் வாழும் தமிழர்கள், மனித உரிமையாளர்கள், விடுதலைப் போராட்ட இயக்கங்கள் ‘தமிழினப்படுகொலை நாளாக’நினைவுகூர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *