சம்மாந்துறையில் மாட்டிறைச்சி விலையைக் கட்டுப்படுத்த கோரிக்கை!

 

சம்மாந்துறைப் பிரதேசத்தில் விற்பனை செய்யப்படும் மாட்டிறைச்சியின் விலைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் பஹ்மி சுலைமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்மாந்துறை பிரதேச சபையின் ஐந்தாவது கூட்டத்தொடரின் 17ஆவது அமர்வு கடந்த 10ஆம் திகதி பிரதேச சபையில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய அவர், பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு மாட்டிறைச்சி விலைகளைக் கட்டுப்படுத்த உரிய தரப்பினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *