போலியான சாரதி அனுமதிப்பத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்தமை மற்றும் உரிமங்களை வைத்திருந்தமை தொடர்பில் இரு சந்தேக நபர்கள் நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிகட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரநாயக்கபுர சந்திப் பகுதியில்,போலியான சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று (11) கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போதே மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 12 போலி சாரதி அனுமதிப்பத்திரளும், 8 போலி தேசிய அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 32 மற்றும் 52 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் அங்கொட மற்றும் நாரஹேன்பிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

