சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் “மையோன் எடியுகேசன் எய்ட்” அமைப்பின் அனுசரணையில், மூன்றாவது முறையாக இரத்ததான முகாம் இன்று (14) அமைப்பின் காரியாலத்தில் இடம்பெற்றது.
அமைப்பின் தலைவர் எஸ்.எம்.நஸீர் தலைமையில், அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் முஹம்மட் அஸ்வர், செயலாளர் யு.கே.காலிதீன் ஆகியோரின் வழி நடாத்தலில் இடம்பெறும் இக்குருதிக்கொடை நிகழ்வில் இன, மத பேதமற்ற முறையில் இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டு குருதிக் கொடையினை வழங்கினர்.
இந்த குருதிகள் அனைத்தும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிலவும் குருதித்தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் முகமாக வழங்கப்படுவதோடு, இங்கு அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர் வைத்தியசாலையின் இரத்த வங்கியின் டாக்டர் ஜே. நிரோஜன், தாதிய உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் கலந்து கொண்டு குருதிக்கொடையாளர்களிடமிருந்து குருதியினை பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் ஸூரா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் எம்.ஐ. ரஃபி, ஜனாஸா மக்கள் பேரவையின் பொதுச் செயலாளர் யூ.கே. காலித்தீன், பொருளாலர் ஏ.எச். முர்சித், முன்னாள் தலைவர் ஏ.ஸ். அஸ்வர், ஸூரா சபையின் உறுப்பினர்கள், பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் ஜனாஸா மக்கள் பேரவையின் முதுகெழும்பாக செயற்படுகின்ற களப்பணியாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பேரவையின் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று பயணாளிகளை இணங்கண்டு அழைத்து வந்து இரத்தம் வழங்குவதற்கு உருதுனையாக இருந்ததை காணக்கூடியாதாக இருந்தது

