திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேசத்தைச் சேர்ந்த 150 மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (21) சனிக்கிழமை வெருகல் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவீரர் பெற்றோர்கள் மேளதாளங்களுடன் விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மாவீரர்களை நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் மற்றும் மாவீரர் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

