லண்டனில் தமிழீழ தேசியக் கொடி நாள் நிகழ்வு!

பிரித்தானியாவின் லிவர்பூலில் தமிழீழ தேசியக் கொடி நாள் நிகழ்வு நேற்று (21) நடைபெற்றது.

நேற்று நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை லிவர்பூலில் உள்ள Cricket Club மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதி அமைச்சரான யோகன் இரத்தினம் (Yogan Ratnam) மற்றும் அமைச்சர் அந்தோணிப்பிள்ளை அல்பிரட் அந்தனி (வீரன்) ஆகியோரின் ஏற்பாட்டில், மாவீரர் குடும்பங்களின் நலன்புரி அமைச்சின் ஒழுங்கமைப்பில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன், நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் கொடியுடன் அணிவகுத்து நின்று நிகழ்வில் பங்கேற்றனர்.

பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *