முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு இலங்கை தமிழரசுக்கட்சியின் முரசுமோட்டை வட்டாரத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி முன்றலில் நடைபெற்றது.
குறித்த இரத்ததான முகாமானது வட்டார தமிழரசுக்கட்சி இளைஞர் அணி செயற்பாட்டாளர் அ. பமீகரன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் தமிழரசுக்கட்சி சார்பாக குறித்த வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்ட பரமலிங்கம் பாஸ்கரன் கலந்து கொண்டு இரத்ததான நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


