செல்லுபடியாகும் விசா அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே ஒப்புக்கொண்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று (26) கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, டயானா கமகே சார்பில் ஆஜரான சட்டத்தரணி மொஹான் செனவிரத்ன, குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொள்வதாக நீதிமன்றத்தில் அறிவித்தார்.
இதனையடுத்து, வழக்கு விசாரணைகள் சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டன.

