உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இலங்கையின் ருமேஷ் தரங்க, தாய்நாட்டில் நடைபெறும் போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்கவுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் டிசம்பர் 6ஆம் திகதி தியகம விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள 50ஆவது தேசிய விளையாட்டு விழாவில், மேல் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவர் போட்டியிடவுள்ளார்.
தேசிய விளையாட்டு விழாவின் பொன்விழா நிகழ்வுகள் டிசம்பர் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டி இறுதி நாளான டிசம்பர் 6ஆம் திகதி பிற்பகல் நடைபெறவுள்ளது.
உலகின் முதல்நிலை ஈட்டி எறிதல் வீரராக வரலாறு படைத்துள்ள ருமேஷ் தரங்க, இலங்கை விளையாட்டு ரசிகர்கள் முன்னிலையில் முதன்முறையாகப் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

