செம்பியன்பற்று வடக்கில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் கௌரவிப்பு; நினைவுரையும் இடம்பெற்றது
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் தமிழ் தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு, தாயக மண்ணின் விடுதலைக்காகத் தமது உயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் கௌரவிக்கும் நிகழ்வும், மாவீரர் நாள் சிறப்பு நினைவுரையும் இடம்பெற்றன.
குறித்த நிகழ்வில், மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், அமலமரித்தியாகிகள் சபையைச் சேர்ந்த அருட்தந்தை வசந்தகுமார் அடிகளார் மாவீரர் நாள் தொடர்பான சிறப்பு நினைவுரையையும் நிகழ்த்தினார்.
செம்பியன்பற்று வடக்கு மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு உணர்வுபூர்வமாகவும் எழுச்சியுடனும் இடம்பெற்றது.
இதன்போது, மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
மாவீரர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து, அவர்களின் குடும்பத்தினரைக் கௌரவிக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

