2025 ஜனவரி மாதம் முதல் 2026 ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை நாட்டின் அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்பின் மூலம் ஈட்டப்பட்டுள்ள மொத்த வருமானம் 27,581.40 மில்லியன் ரூபா எனப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (28.11.2026) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அதன்படிஇ கொட்டாவையில் இருந்து மத்தள வரை செல்லும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மூலம் குறித்த காலப்பகுதியில் ஈட்டப்பட்டுள்ள வருமானம் 11,486 மில்லியன் ரூபாவாகும்.
மேலும் மீரிகமையில் இருந்து குருநாகல் வரை செல்லும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூலம் 7,282 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
பேலியகொடையில் இருந்து கட்டுநாயக்க வரை செல்லும் அதிவேக நெடுஞ்சாலையின் மூலம் அதே காலப்பகுதியில் ஈட்டப்பட்டுள்ள வருமானம் 2,560.05 மில்லியன் ரூபாவாகும்.
இதற்கமைய இந்த மூன்று அதிவேக நெடுஞ்சாலைகளிலிருந்து மாத்திரம் ஈட்டப்பட்டுள்ள மொத்த வருமானம் 21,328.05 மில்லியன் ரூபாவாகும்.
இதற்கு மேலதிகமாக வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலையின் மூலம் குறித்த காலப்பகுதியில் 6,251 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன்படி, 2025 ஜனவரி மாதம் முதல் 2026 ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை நாட்டின் அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்பின் மூலம் ஈட்டப்பட்டுள்ள மொத்த வருமானம் 27,581.40 மில்லியன் ரூபா என அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்

