கறுப்பு ஜூலை குறித்து ஆராய விசேட தெரிவுக்குழு நியமனம்!

1983 கறுப்பு ஜூலை துயரச் சம்பவம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து முழுமையான ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தலைமையில் 11 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அந்த தெரிவுக்குழு குறித்து இன்று (28) பாராளுமன்றத்திற்கு அறிவித்த சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, அதன் தாக்கங்கள் தொடர்பில் முழுமையான ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்கும், தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் வழங்குதல் தொடர்பான தமது யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைப் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கும் இந்த விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *