பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த இரண்டு விமான நிறுவனங்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸை தளமாகக் கொண்ட French Bee விமான நிறுவனம், டிசம்பர் 19ஆம் திகதி முதல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வாரத்திற்கு இரண்டு விமான சேவைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.
அதேவேளை, ரஷ்யாவின் S7 Airlines நிறுவனம், டிசம்பர் 20ஆம் திகதி முதல் செர்பியாவிலிருந்து கொழும்புக்கு வாரத்திற்கு இரண்டு நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.
இந்த புதிய விமான சேவைகளின் அறிமுகம், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

