யாழ்ப்பாணம் வடமராட்சியில் சிறுமியை தாக்கிய சம்பவம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி பகுதியில் நேற்றிரவு (23) சிறுமி ஒருவர் கடை ஒன்றில் கண்டோஸ் திருடியதாக குற்றம் சாட்டி கடை உரிமையாளர் (10) வயது சிறுமியை சரமாரியாக தாக்கிய சம்பவம் இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த சிறுமி குறித்த கடைக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்துள்ள இந்நிலையில் மிகுதி பணத்திற்காக சிறுமி அதற்கு பெறுமதியான கண்டோஸ் ஒன்றினை எடுத்து உண்டுகொண்டிருந்த நிலையில் கடை உரிமையாளர் திருடப்பட்தாக கருதி குறித்த (10) வயது சிறுமியை சிறுநீர் கழியும்வரை வயரால் கடுமையாக தாக்கியுள்ளார்.

குறித்த விடயமறிந்த பெற்றோர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியவாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *