ஹிக்கடுவ கடலுக்கு நீராடச் சென்ற வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் நேற்று(18) பிற்பகல் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.
அதற்கமைய, உயிர் காக்கும் பிரிவினரின் உதவியுடன் குறித்த நபரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு வேவல கடற்கரைப் பகுதியில் குறித்த நபரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் 43 வயதுடைய நோர்வே நாட்டைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று உயிரிழந்த நபர் அவரது சகோதரருடன் ஹிக்கடுவ கடலில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

