நல்லூர் கோவில் அருகிலுள்ள அசைவ உணவகம் சைவ உணவகமாக மாற்றம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்திற்கு எதிராக போராட்டம் கிளம்பியதையடுத்து தற்போது சைவ உணவுகளை மாத்திரம் விற்பனை செய்ய உணவக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

 

குறித்த அசைவ உணவகம் ஆரம்பிக்கப்பட்டதற்கு எதிராக சைவ சமய ஆர்வலர்கள், அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

 

குறித்த அசைவ உணவகம் அமைக்கும் நடவடிக்கை கலாசாரம் மற்றும் பாரம்பரியத்துக்கு எதிரானது என்பதனை வெளிப்படுத்தும் முகமாக இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

 

இதனையடுத்து, இந்த அசைவ உணவகத்தின் முன்னால் வைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற விளம்பரப்பலகை யாழ் மாநகர சபையினரால் அகற்றப்பட்டது.

 

இந்நிலையில் குறித்த அசைவ உணவகத்தின் முகப்பில் சைவ உணவுகள் மட்டும் பரிமாறப்படும் என பதாகையில் குறிப்பிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *