மலையகத்தில் பல்வேறு இடங்களில் பெய்துவரும் கடும் மழை, காற்று காரணமாக மின்துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.
மலையகத்தின் பல்வேறு இடங்களில் மின் கம்பங்களின் மீது மரம் முறிந்து விழுந்துள்ளமையால் இவ்வாறு மின்துண்டிப்பு ஏற்பட்டுள்ளதோடு, அவற்றை உடனடியாக சீர் செய்ய இலங்கை மின்சார சபை ஊழியர்கள் குறித்த இடங்களுக்கு விரைந்துள்ளனர்.
இதேவேளை நேற்று இரவு ஏற்பட்ட கடுமையான காற்று மற்றும் மழை காரணமாக மரங்கள் விழுந்ததாக பதிவாகியுள்ள நிலையில், இதனால் மின்கம்பிகளுக்கு சேதம் ஏற்பட்டு கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

