ஓட்டமாவடி பிரதேசத்தில் இருசாரருக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பு

ஓட்டமாவடி பிரதேசத்தில் இருசாரருக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பில் இருவர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் வாழைச்சேனை ஆதார  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அக்கீல் அவசர சேவைப் பிரிவின் சாரதியும்,  கல்குடா சுழியோடிகள் அமைப்பின் தலைவருமான அப்துல் மஜீட் முகம்மது கலீம் என்பவரும் கிராமசேவகர் ஒருவரின் தாக்குதலுக்கு இலக்காகி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

நாவலடியில் இருந்து வாழைச்சேனைக்கு நோன்பு கஞ்சி வழங்குவதற்கு சென்ற வேளையில்  தனது உறவினரை சிலர் தாக்குவதை அவதானித்து அவரை காப்பற்ற சென்ற போது அக் கூட்டத்தில் நின்ற கிராம சேவகர் தன்னை தாக்கியதாகவும் அவருக்கெதிராக  சட்ட நடவடிக்கை எடுக்க போவதாகவும் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *