நாடளாவிய ரீதியில் நேற்று(02) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 526 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 145 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 201 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 166 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன் 03 பேரும், கஞ்சா செடிகளுடன் 04 பேரும், போதை மாத்திரைகளுடன் 07 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 152 கிராம் 349 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 567 கிராம் 367 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 02 கிலோ 169 கிராம் 136 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 20 கிராம் 600 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருளும், 7948 கஞ்சா செடிகளும், 33 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

