நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களினால் நேற்று(05) நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(06) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
நேற்று காலை 8 மணி முதல் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பதவி உயர்வில் நிலவும் தாமதம் மற்றும் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதில் சிக்கல்கள் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை முன்னிறுத்தி பனிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது என நிறைவு காண் மருத்துவ தொழில் வல்லுனர் ஒன்றியத்தின் செயலாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

