இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹெலிகொப்டர் விபத்து; 7 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று(15) அதிகாலை 5:20 மணியளவில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஸ்ரீ கேதார்நாத் தாம் நகரிலிருந்து குப்தகாஷிக்குச் சென்று கொண்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்றே, கௌரிகுண்ட் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மோசமான வானிலை காரணமாக தெளிவற்ற நிலையில் கௌரிகுண்ட் காட்டு பகுதியில் விழுந்து விபத்து நிகழ்ந்ததாக உத்தரகாண்ட் மாநில அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *