சுதர்ஷன பெர்னாண்டோவை கைது செய்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் டொக்டர் சுதர்ஷன பெர்னாண்டோவுக்கு பயணத் தடை விதித்த கொழும்பு தலைமை நீதிவான் தனுஜா லக்மாலி, அவர் இலங்கை திரும்பியதும் அவரைக் கைது செய்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்குமாறு நேற்று(17) குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டார்.

சுதர்ஷனா மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபத்தின் தலைவராக இருந்தபோது, ​​நிர்ணயிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு மாறாக, கூட்டுத்தாபனத்தில் உயர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்து தனது நெருங்கிய நண்பர்களுக்கு தொழில் வழங்கியதன் மூலம் ‘ஊழல்’ குற்றத்தின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பமாகின.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த பின்னர் நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

விசாரணைக்காக ஆஜராகி வாக்குமூலமளிக்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அதைப் புறக்கணித்து வெளிநாடு சென்றுள்ளதாகக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *