இன்றைய நாளுக்கான இராசி பலன்கள்

மேஷம்
மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். தாயாரின் உடல் நிலை
சீராகும்.வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர் ஆவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

ரிஷபம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நன்மை நடக்கும் நாள்.

மிதுனம்
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

கடகம்
எதிர்பார்த்த சில வேலைகள் தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். நட்பு வட்டம் விரியும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

சிம்மம்
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். துணிச்சலுடன் செயல்பட வேண்டிய நாள்.

கன்னி
இதுவரை இருந்த அலைச்சல் டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். உற்சாகமான நாள்.

துலாம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். கணுக்கால் வலிக்கும். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நாவடக்கம் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்
எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம் பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். போராடி வெல்லும் நாள்.

தனுசு
எதிர்பார்ப்பு நிறைவேறும். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். திடீர் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். அமோகமான நாள்.

மகரம்
அனுபவப் பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள்.
வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். மதிப்பு கூடும் நாள்.

கும்பம்
கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். உறவினர்கள் வீடு தேடிவருவார்கள். வியாபாரத்தில் போட்டி
கள் குறையும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். புதிய மாற்றம் ஏற்படும் நாள்.

மீனம்
சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உடல்நலம் பாதிக்கும். முன்கோபத்தால் பகை உண்டாகும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி குறை கூறுவார். பொறுமை தேவைப்படும் நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *