நீதிமன்ற சிறைக்கூடத்தில் இருந்த சிறைக் கைதியிடம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (01) ஒரு மாத கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இறக்காமம் முஸ்லிம் விவகார குவாஷி நீதிமன்ற நீதிபதியான சட்டத்தரணி எஸ்.எல். பாறுக் சில மாதங்களுக்கு முன்னர் நீதிமன்ற சிறை கூடத்திற்குள் சிறைச்சாலைப் பாதுகாப்பு உத்தியோகத்தரின் பொறுப்பிலிருந்த சிறைக் கைதியிடம் இலஞ்சமாக பணம் வாங்கியமை தொடர்பில் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதது.
குறித்த விடயம் தொடர்பில் மேலதிக ஆலோசனை உரிய தரப்பினரிடம் பெறப்பட்டு குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அம்பாறை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் குறித்த வழக்கு செவ்வாய்க்கிழமை (01) விசாரணைக்கு உட்பட்டபோது சந்தேக நபரான நீதிபதி தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட நிலையில் அவருக்கு ஒரு மாத கால சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதேவேளை குவாஷி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தவர்களிடம் தகாத வார்த்தை பிரயோகம் தாபரிப்பு செலவு, பிள்ளை செலவுகள் மற்றும் நிகழ்நிலை பண மோசடிகளை நீதிபதி ஈடுபட்டு வந்துள்ளார் என அவருக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

