மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளரும் தமிழ் தேசிய பற்றாளருமான மாணிக்கராஜா சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேசசபையின் தவிசாளராக பதவியேற்று 27தினங்களே நிறைவடைந்துள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மண்முனைப்பற்று கிளையின் தலைவராகவும் மண்முனைப்பற்றின் தவிசாளராகவுள்ள மாணிக்கராஜா ஆரையம்பதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர்.
தொழிலதிபராகவுள்ள அவர் மண்முனைப்பற்றில் கடந்த காலத்தில் ஆயுதக்குழுக்களின் அட்டகாசத்திற்கு மத்தியிலும் தமிழ் தேசியம் சார்ந்த செயற்பாட்டளராக இருந்து வருகின்றார்.
சுகயீனம் காணரமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

