மட்டக்களப்பு மகிழடித்தீவில் யூன் 19 பத்மநாபாவின் 35 வது தியாகிகள் தினத்தையிட்டு மக்கள் இல்லாத மண்ணை நேசிக்கவில்லை மக்களுக்காகவே மண்ணை நேசிக்கின்றோம் எனும் தொனிப் பொருளில் காத்தான்குடி, கொக்கட்டிச்சோலை, அருந்தலாவ, வெருகல் படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் நேற்று(06) சுடர் ஏற்றி இரண்டு நிமிட அஞ்சலியுடன் இடம்பெற்றது.
பத்மநாபா மக்கள் முன்னணி மகிழடித்தீவு அமைப்பின் ஏற்பாட்டில் யூன் 19 தியாகிகள் தினத்தின் 35 வது நினைவேந்தல் மகிழடித்தீவு கலாசார மண்டபத்தில் சோலையூரான் என்று அழைக்கப்படும் ஜோதி தோழரின் அனுசரணையுடன் முன்னணி அமைப்பின் செயலாளர் ஜே. வினோகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நினைவேந்தலில் அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் முனிசாமி உதயராஜ், சமூக செயற்பாட்டாளர் தோழர் சுகு, சமூக செயற்பாட்டாளர் தோழர் செங்கதிரோன் கோபால கிருஷ்ணன், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர், ஆலைய தலைவர், உறுப்பினர்கள், மகிழடித்தீவு விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், மகிழடித்தீவு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மட்டக்களப்பு, அம்பாறை பத்மநாபா மக்கள் முன்னணி மற்றும் ஈபிஆர்எல் செயலாளர் தோழர் சலீம், முன்னணி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது தோழர் பத்மநாபாவின் திருஉருவப் படத்திற்கு மலர் அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றி மலர் தூவி சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்திய பின்னர் நலிவுற்ற குடும்பப் பெண்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப பெண்கள் 200 பேருக்கும் நிதி உதவியும், உயர்தரப்பரீட்சை சித்தி அடைந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மண்முனை தென்மேற்கு பிரதேச மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்புக்கான நிதி உதவிகளையும் வழங்கி வைத்தனர்.

