கிழக்கு மாகாண ஆளுநாின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேலும் வினைத்திறன் உடையதாக முன்னெடுக்கும் வகையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடா்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கல்லடி கடற்கரையினை சுத்தம் செய்யும் நிகழ்வு
மட்டக்களப்பு மாநகர முதல்வர் தலைமையில் இன்று(08) காலை இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர கலந்துகொண்டு வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
கிழக்கு மாகாண சபையின் உயர் அதிகாரிகள், மாநகர சபையின் ஆணையாளர், அரச உயர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப்படையினர் ஆகியோர் இந்த வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டனர்.
கடற்கரையை மேலும் அழகுபடுத்தும் நோக்குடன் இந்த சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது சுற்றாடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொழுதின் பிளாஸ்டிக் பொருட்கள் இப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டதுடன் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணிகளும் இங்கு முன்னெடுக்கப்பட்டன.
புதிய அரசாங்கத்தினால் உள்ளூராட்சி சபைகள் அமைக்கப்பட்டதன் பின்பு இடம்பெற்ற கிழக்கு மாகாணத்தின் பிரதான ஆரம்ப நிகழ்வாக இடம்பெற்றதுடன் இன்றைய சுத்தப்படுத்தல் பணிகளின் போது சுமார் மூன்று கிலோமீற்றர் வரையிலான பகுதிகளில் இத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


