ஒரு அழகான கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம் எனும் தொனிப் பொருளில் கிளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று செங்கலடி பிரதேச சபையின் ஏற்பாட்டில் சபையின் தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரன் தலைமையில் 8.30 மணியளவில் களுவன்கேணி கடற்கரைப்பகுதியினை சுத்தம் செய்து களப்புப் பகுதிகளில் கண்ணா மரங்களை நட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது பெருமளவான குப்பைகள் தேங்கிக் கிடந்த இடங்கள் துப்புரவு செய்யப்பட்டது.
இதன்போது சபை தவிசாளர், உறுப்பினர்கள், ஊழியர்கள், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


