சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 30 வருட நிறைவை முன்னிட்டு மரநடுகை நிகழ்வு

இலங்கையில் வறுமை ஒழிப்புக்காக 1995ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு  சம்மாந்துறை பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரநடுகை மற்றும் மாணவர்களுக்கு வீதிப் போக்குவரத்து ஒழுங்கு விதிமுறைகள் சம்மந்தமான பயிற்சி வகுப்புகள் நேற்று(08) சம்மாந்துறை மத்திய கல்லூரியில் பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபாவின் தலைமையில் இடம்பெற்றது.

 

இந் நிகழ்வானது சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம் ஹுசைனின் நெறிப்படுத்தலின் கீழ் இடம்பெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருமான எஸ். ஜெகராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

 

இந் நிகழ்வுக்கு சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.டி.எம். ஜனூபர், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் டி.எம் ரஹீமா, அஸ் சிராஸ் வங்கி முகாமையாளர் எம்.எம். முபாரக்,கிராம சேவகர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

பாடசாலை மாணவர்களுக்கு வீதிப் போக்குவரத்து ஒழுங்கு விதிகள் சம்மாந்தமான சட்ட விளக்கவுரையினை சிரேஸ்ட சட்டத்தரணி எம்.பி.எம். பெளஸானாலும் நடைமுறை சார் போக்குவரத்து ஒழுங்கு விதிகள் சம்மந்தமாக சம்மாந்துறை பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.எம் நஜீப் ஆகியோர்களினால் விரிவுரைகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *