திருகோணமலை மாநகர சபையின் பதில் ஆணையாளராக சிவராஜா நியமிப்பு

திருகோணமலை மாநகர சபையின் பதில் ஆணையாளராக யூ. சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர இன்று(09) சிவராஜாவுக்கு நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.

 

திருகோணமலை மாநகர சபை முன்னர் ஒரு நகராட்சி மன்றமாக இருந்தது,

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநகர சபையாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் யூ. சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில் இவர் தற்போது கிழக்கு மாகாண சமூக சேவைகள் துறையின் மாகாணப் பணிப்பாளராக பணியாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *