மாற்றுவலுவுள்ளோருக்கான தேசிய மட்ட விளையாட்டு போட்டி

மாற்றுவலுவுள்ளோருக்கான தேசிய மட்ட விளையாட்டுப்போட்டியில் கிளிநொச்சி மாவட்டம் முதலிடம் பெற்றுக்கொண்டது.
2025ம் ஆண்டுக்கான தேசிய மட்ட மாற்றுவலுவுள்ளோருக்கான விளையாட்டு நிகழ்வு இன்றைய தினம் ஹோமாகம மகிந்த ராஜபக்ச விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.
25மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி மாற்றுவலுவுள்ளோர் கலந்து கொண்டனர்.குறித்த போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த வீர வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த போட்டியில் கிளிநொச்சி மாவட்டம் 50 புள்ளிகளைப்பெற்று முதலிடத்தை பெற்றுக்கொண்டது 43புள்ளிகளைப்பெற்று கம்பஹா மாவட்டம் இரண்டாம் இடத்தினையும் 36 புள்ளிகளைப்பெற்று முல்லைத்தீவு மாவட்டம் மூன்றாம் இடத்தைப்பெற்றுக்கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *