கோறளைப்பற்று மத்தியின் புதிய இளைஞர் சம்மேளனம் தெரிவு

வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவின் 2025ம் ஆண்டுக்கான புதிய இளைஞர் சேவை மன்றத்திற்கான புதிய இளைஞர் சம்மேளனத்தின் தெரிவுகள் இன்று(12) காலை 9.30 மணிக்கு செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

 

கோறளைப்பற்று மத்தியின் இளைஞர் சேவை அலுவலர் (பயிற்சி) ஏ. எஸ். ஹாரிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மா. சசிகுமார், இராணுவ அதிகாரி சார்ஜன்ட் எஸ். ஐ. எம். றிஸ்வி, அஸ்வெசும நலன்புரி சேவை உத்தியோகத்தர் வி. ரி. எம். றிபான், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எஸ். எச். எம். லைஷ் மற்றும் இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள் ஆகியோ கலந்து கொண்டனர்.

 

புதிய இளைஞர் சம்மேளன தெரிவுகளில் ஆரம்ப வேளையில் சிலரின் கருத்து வேறுபாடுகளால் முரண்பாடுகள் இடம்பெற்றாலும் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியின் தலையீட்டினால் சுமூகமான நிலைக்கு கொண்டுவரப்பட்டது.

 

குறித்த தெரிவுகளின் அடிப்படையில்; தலைவராக எம். என். எம். ஹிஷாம், செயலாளராக ஏ. எஸ். ஹரிஸ், உப தலைவராக ஐ. எம். இக்ரா, பொருளாளராக என். எம். இஹ்ஸான், உப செயலாளராக எம். அனுசன் அமைப்பாளராக எம்.என். எம். ஹிஸாத் உப அமைப்பாளராக ஐ. எம். சாபிக் மற்றும் ஏனைய துறைகளுக்கான உறுப்பினர்கள் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *