பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும், அரச உத்தியோகத்தர்களுக்குமான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலானது கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஜே. ஏ. சந்திரசேன தலைமையில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ், மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர மெத்தர தந்திரி, உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் சமரக்கோன், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பாக மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


