இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் திங்கட்கிழமை (14) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.7196 ரூபாயாகவும் கொள்வனவு விலை 297.1393 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 412.2590 ரூபாய் மற்றும் கொள்வனவு விலை 399.0959 ரூபாயாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 357.4812 ரூபாய் எனவும் கொள்வனவு விலை 345.4410 ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


