தவிசாளர் உலக வங்கி பிரதிநிதிகளிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக வீதி அபிவிருத்திக்காக சுமார் 240 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு இவ்வருட இறுதியில் வேலைத்திட்டம் ஆரம்பம்
ஏறாவூர் பிரதேசத்தின் நீண்ட கால தேவையாக உள்ள வீதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பல்வேறு தொடர் முயற்சிகளை தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ். நழீம்தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக் காலம் மற்றும் தற்போதைய தவிசாளர் பதவி என்பவற்றின் மூலம் உலக வங்கி பிரதிநிதிகளிடம் விடுத்த வேண்டுகோள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வோடு இணைந்து தொடர்தேர்ச்சியாக மேற்கொண்டதன் பயனாகவும், பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும், ஆளும் அரச பிரதிநிதிகள், உயர் அதிகாரிகளுடனான தனிப்பட்ட தொடர்புகள் மூலமாகவும் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் , ஏறாவூர் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு ஆகியோர் மூலமும் முயற்சிகளை செய்த அதே வேளை அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் காதியார் வீதி அபிவிருத்தி தொடர்பாக எடுத்துரைத்ததற்கு அமைவாக அதனை விரைவாக சீர் செய்து தருவதாக வாக்குறுதியளித்திருந்தார்.
அத்தோடு பொதுமக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக முன்னுரிமை அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வீதி அபிவிருத்திப் பட்டியலை சமர்ப்பித்து கோரிக்கை ஒன்றினையும் முன்வைத்திருந்தார்.
அதன் பிரதி பலனாக தற்போது உலக வங்கியின் நிதி உதவியுடன் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டு நிறுத்தப்பட்ட ஐ புரயெட் எனும் ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்திப் பணிகள் மீள ரி5 எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் தவிசாளரிடம் தொடராக வேண்டிக் கொள்ளப்பட்ட பல வீதிகள் உள்வாங்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்னும் சில தினங்களில் கேள்வி மனு கோரலும் இடம் பெற உள்ளது –
அதன் பிரகாரம் 520 மீட்டர் தூரத்திற்கு காதியார் வீதி (காபட் வீதி) – வடிகாணுடன் அபிவிருத்தி
புகையிரத நிலைய வீதி (காபட் வீதி) வடிகாணுடன் 310மீற்றர் அபிவிருத்தி
ஆலையடி வீதி அலிகார் மைதான சந்தியில் இருந்து காதர் ஆசிரியர் வீடு வரையான 130மீற்றர் (காபட் வீதி)
ஆர்.டி.எஸ் வீதி மிச்நகர் (140மீற்றர் காபட் வீதி)
வாவிக்கரை வீதி – திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவு வரை வரை 150மீற்றர் (காபட் வீதி)
ஹூதா பள்ளி வீதி – மிச்நகர் 440மீற்றர் (காபட் வீதி)
பாடசாலை வீதி மீராகேணி 180மீற்றர் (காபட் வீதி)
ஹசன் ஹூஸைன் பள்ளி வீதி -310மீற்றர் (காபட் வீதி)
இவ்வருட இறுதியில் இவ்வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கான சுமார் 240 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அமைச்சர் பிமல் ரத்னாயக்கா, அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி ஆகியோருக்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.


