கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் இவ்வாண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று(10) காலை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் அமைதியான முறையில் இடம்பெறுகிறது.
மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பரீட்சை நிலையங்களில் இன்று காலை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த பரீட்சைக்கு சமூகம் தந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.
ஆலயங்களில் வழிபாடுகளின் பின் தமது பெற்றோரின் ஆசிர்வாதத்துடன் பாடசாலை ஆசிரியர்களின் ஆசிர்வாதத்துடன் பரீட்சைக்கு ஆர்வத்துடன் சென்றதைக் காணக் கூடியதாக இருந்தது.
வலயக்கல்வி அலுவலகத்தினால் பரீட்சை நிலையங்களுக்குத் தேவையான முன்னாயத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததையும் காணக் கூடியதாக இருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் இருந்து 9055 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். இவர்களுக்காக 91 பரீட்சை நிலையங்களும் இணைப்பு நிலையங்களாக 13 நிலையங்கள் இவ்வாண்டு அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


