பட்டலந்த அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய புதிய அரசியலமைப்பில் மக்கள் ‘உயிர்வாழும் உரிமையை’ உள்ளடக்க வேண்டும் என முன்னாள் மனித உரிமை ஆணையாளர் சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த அறிக்கையின் பிரகாரம் சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்ய முடியும். பட்டலந்த விசாரணை அறிக்கையில் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் மக்கள் ‘ உயிர்வாழும் உரிமை’ உள்ளடக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
‘பட்டலந்த வீட்டுத் தொகுதியில் சட்டவிரோத தடுப்பு முகாம் மற்றும் சித்திரவதை முகாம் அமைத்து அவற்றை நடத்திச் சென்றமை தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை சபைமுதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க கடந்த வெள்ளிக்கிழமை (14) நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்தார்.
இந்த அறிக்கை தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் விவாதத்தையும், மே மாதம் இரண்டாம் நாள் விவாதத்தையும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

