ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறைகளுக்கெதிராக போராட்டம்

வடகிழக்கு ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் அடக்குமுறைகளுக்கெதிராக சிறப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பிலுள்ள நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் இன்று (22) குறித்த போராட்டம் நடைபெற்றது.

ஊடகவியலாளர்கள் மீது நடைபெறும் அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்தி, ஊடக சுதந்திரத்தைக் காக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *