முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பாக கொழும்பில் உள்ள இராஜதந்திர சமூகத்தினருடன் எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன ஆகியோர் அடங்கிய எதிர்க்கட்சிக் குழு இந்த முனைப்பில் ஈடுபட்டுள்ளன.
ரணில் விக்ரமசிங்கவின் கைது குறித்து, ஏற்கனவே அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாவின் இராஜதந்திர தரப்புக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அற்பமான குற்றச்சாட்டுகள் என்று கூறும் இந்த விடயம் தொடர்பில், ரணில் விக்ரமசிங்கக் கைது செய்யப்பட்டமை ஜனநாயகத்தின் மீது கடும் விளைவை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

