சித்தாலேப நிறுவனத்தின் 90 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பரிசு வழங்கும் நிகழ்வு

கல்முனை கல்வி வலய கல்முனை அல்-அஷ்ஹர் வித்தியாலய மாணவர்களுக்கு சித்தாலேப நிறுவனத்தின் 90 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பரிசு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(17) பாடசாலை அதிபர் ஏ.எச்.அலி அக்பர் தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சித்தாலேப நிறுவன அம்பாறை மாவட்ட பிரதி முகாமையாளர் ஏ.எல்.காதர் கலந்து கொண்டார்.
அத்துடன் சித்தாலேப நிறுவன முகாமையாளர், உத்தியோகத்தர்கள், பாடசாலை பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *