இலங்கை மத்திய வங்கி இன்று(22) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.8090 ரூபாவாகவும் கொள்வனவு விலை 298.2767 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 415.4562 ரூபா மற்றும் கொள்வனவு விலை 402.8025 ரூபாவாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 361.6818 ரூபா எனவும் கொள்வனவு விலை 350.2193 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


