நூல்கந்தூர ஆதவன் தமிழ் வித்தியாலயத்துக்குரிய புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

நுவரெலியா, ஹங்குராங்கெத்த கல்வி வலயத்துக்குட்பட்ட ஹேவாஹெட்ட – நூல்கந்தூர ஆதவன் தமிழ் வித்தியாலயத்துக்குரிய புதிய கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எஸ். மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் விஜேரத்தின, பெருந்தோட்ட கைத்தொழில்துறை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் பிரத்தியேக செயலாளர் சிவப்பிரகாசம், ஹங்குராங்கெத்த கோட்டக் கல்விப் பணிப்பாளர் கே. ராசலிங்கம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
கல்வி அமைச்சின் ஒரு கோடியே 23 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த கட்டிடம் அமையவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *